top of page

தூத்துக்குடியில் முடி மாற்றம் (Hair Transplantation) – தேவையும் நம்பகத்தன்மையும்

Mar 26

2 min read

Hair transplantation procedure at our clinic serving Valasaravakkam, Ramapuram, Virugambakkam, Porur, and KK Nagar
முடிமாற்று அறுவை சிகிச்சை

முடி கொட்டுதல் ஒரு பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இது மனஅழுத்தத்தையும், தன்னம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. முன்னேற்றமடைந்த மருத்துவ முறைகளால் இப்போது முடி மாற்றம் (Hair Transplantation) செய்ய முடியும்.


தகுந்த பயிற்சி பெற்ற மருத்துவர்களிடம் இந்த சிகிச்சையை மேற்கொண்டு அழகான எதிர்காலத்தை சந்திக்கலாம்..


முடி கொட்டுதலின் பிரச்சினைகள்


முடி கொட்டுதல் ஆனது பல காரணங்களால் ஏற்படலாம்:

1. மரபணு காரணங்கள் – குடும்பத்தில் முடி கொட்டுதல் இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் இது பரவக்கூடும்.

2. உடல் ஆரோக்கியப் பிரச்சினைகள் – உடல் சத்து குறைபாடு, தைராய்டு கோளாறு போன்றவை முடி கொட்டலுக்குக் காரணமாகின்றன.

3. உடல் மற்றும் மன அழுத்தம் – அதிக வேலைப்பளு, உணவு பழக்க முறைகளில் மாற்றம், தூக்கமின்மை ஆகியவை முடி உதிர்வை அதிகரிக்க செய்கின்றன.


முடி மாற்றம் – நிரந்தர தீர்வா?


முடி மாற்றம் (Hair Transplantation) என்பது மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். இதில், தலைக்குப் பின் பகுதியிலிருந்து (donor area) சிறிய சிகை அடுக்குகள் எடுக்கப்பட்டு முன்பகுதியில் (recipient area) மாற்றப்படும். இது FUE (Follicular Unit Extraction) போன்ற முறைகளில் மேற்கொள்ளப்படும்.


1. இயற்கையான தோற்றம் – முறைப்படி செய்யப்படும் முடி மாற்றம் தனிநபரின் இயற்கையான முடியின் அடையாளத்திற்கேற்ப பொருந்தும்.

2. பாதிப்பு குறைவான அறுவைசிகிச்சை – சரியான முறையில் மேற்கொள்ளும் போது, பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும்.


முடி மாற்றம் செய்யும் நம்பகமான மருத்துவர்கள் எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

1. மருத்துவர்களின் தகுதி – முடி மாற்றம் செய்யும் மருத்துவர் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

2. மருத்துவமனை மற்றும் முறையான சுகாதார வசதிகள் கொண்ட, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் உள்ள மருத்துவமனையை தேர்வு செய்ய வேண்டும்.

3. முந்தைய நோயாளிகளின் கருத்துக்கள் – முன்பு முடி மாற்றம் செய்தவர்கள் கூறும் விமர்சனங்களைப் பார்த்த பிறகு தான் முடிவு எடுக்க வேண்டும்.

4. பேசும் முறையில் நம்பகத்தன்மை – “ஒரே நாளில் முடி மாற்றம் செய்து விடலாம்”, “இது 100% செயல்படும்” போன்ற மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் தரும் இடங்களை தவிர்க்க வேண்டும்.


தூத்துக்குடியில் நம்பகமான முடி மாற்றம் – ஒரு புதிய துறையின் தேவை


தூத்துக்குடியில் பலரும் முடி கொட்டுதல் காரணமாக சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சென்று செலவாகும் பணத்தையும் நேரத்தையும் வீணாக்கி வருகின்றனர். அந்த தேவையை உணர்ந்ததால்தான், நான் நம்பகமான முறையில், தகுதிபெற்ற மருத்துவர்களால் முடி மாற்றம் செய்யும் மையத்தை துவக்கவிருக்கிறேன்.


• அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மருத்துவமனை

• தகுதிபெற்ற AIIMS Delhiல் பயின்ற மருத்துவர்கள்

• நோயாளிகளுக்கு சரியான ஆலோசனை

• மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகள்


முடி மாற்றம் ஒரு சிறந்த மருத்துவ தீர்வாக இருப்பினும், அதை அனுபவம் வாய்ந்த, தகுதி பெற்ற மருத்துவர்களிடம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். தவறான முறைகளால் தங்கள் ஆரோக்கியத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். தூத்துக்குடியில் நம்பகமான, நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய முடி மாற்ற சேவை துவக்குவதில் பெருமை கொள்கிறேன். நம்பகமான தகவல்களை பெற்றுக் கொண்டு, உங்கள் முடி ஆரோக்கியத்தை பாதுகாக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Mar 26

2 min read

Working Hours

For appointments and enquiries,

contact us at +91 90808 62264

4.9 ⭐ with 143 google reviews 

For appointments

bottom of page